அவ்வளவு அசால்ட்டா படத்தில் நடிக்க ஓகே சொல்ல மாட்டார் விஜய் - தளபதி 65 பின்னனி!
பெரிய நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தில் அவர்களை புக் செய்ய பல இயக்குனர்கள் முந்தியடித்துக்கொண்டு கதை சொல்வது வழக்கம். ஆனால், அந்த நடிகர்கள் முதலில் யார் படத்தில் நடிக்க விரும்புகிறார் என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி. அப்படி நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போதே அட்லீ, பாண்டிராஜ், சுதா கொங்கரா, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட நான்கு இயக்குனர்களின் கதையை கேட்டாராம்.
நடிகர் விஜய் எப்போதும் ஒரு இயக்குனரிடம் கதை கேட்டு உடனே ஓகே சொல்லமாட்டாராம். இரண்டு மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டு அதில் யாருடைய படத்தில் முதலில் நடிக்கலாம் என யோசித்து முடிவெடுத்த பின்னர் தான் ஓகே சொல்வராம். இதில் சுதா கொங்கரா, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட மூவரின் கதை தேர்வு செய்த விஜய் முதலில் சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஓகே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் அவ்வளவு எளிதில் ஓகே சொல்லவில்லையாம் சுதா கொங்கரா தற்போது இயக்கியுள்ள சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தனக்கு திரையிட்டு காட்டும்படி விஜய் கேட்டதாகவும், அதைப் பார்த்த பிறகே அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டுள்ளது.