புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (17:20 IST)

கமல்ஹாசனுடன் மோதும் இளம் நடிகர் இவர்தான் …

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசனுடன் லொகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃப்கத்பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

எனவே விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.