திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (11:38 IST)

நடுரோட்டில் கழிவுகளை அள்ளிய விஜய் ஆண்டனி - பாராட்டிய பொதுமக்கள்

விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஸ்னீக் பீக் 
கிருத்திகா உதயநிதியின் ‘காளி' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன்', ஆண்ட்ரு லூயிஸின் 'கொலைகாரன்' மற்றும் நவீனின் ‘அக்னிச் சிறகுகள்' என 3 படங்கள் உள்ளது. இதில் ‘திமிரு புடிச்சவன்' படத்தில் விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக வலம் வருகிறார்.
 
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் டூயட் பாடி ஆடியுள்ளார். விஜய் ஆண்டனியே இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன்' மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில்  தற்போது, படத்தின் ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் விஜய் ஆண்டனி  போலீஸ் வேடத்தில் ரோட்டில் குப்பை அள்ளுவது போன்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
 
https://www.youtube.com/watch?time_continue=169&v=DkENiZ4R7Gs