ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (16:28 IST)

யோகி பாபு பட விழா... பாஜகவை கிண்டலடித்த கரு. பழனியப்பன்!

இயக்குநர் சாம் ஆண்டர்சன் இயக்கத்தில் யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா, சார்லி , ஆனந்த ராஜ், ரவிமரியா லிவிங்ஸ்டன்  உள்ளிட்ட நடிகர் இணைந்து நடித்துள்ள படம் தான் கூர்கா.
இப்படத்தை 4 மங்கி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ராஜ் ஆயன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. 
 
இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள நடிகர்கள், கலைஞர்கள் உள்பட, பாடகர் பாலசுப்பிரமணியம், கரு பழனியப்பன், சித்தார்த்,  பலர் கலந்துகொண்டனர். 
 
இவ்விழாவில் கரு பழனியப்பன் பேசியதாவது :
 
ராஜ ராஜ சோழன் குறித்து பேசுவது முக்கிய பேசுபொருளாகி விட்டது. அவரது காலம் முடிந்துவிட்டது. எனவே தற்போது தஞ்சையில் மீத்தேன் எடுப்பவர்களைப் பற்றித்தான்பேச வேண்டும். மேலும் பல வருடங்களுக்கு முன்னர் நம் நிலத்தை யார் பறித்தாரகள் என்பதைப் பேசுவதை விட்டிவிட்டு இன்று நம் கண்முன் நிலத்தை பறித்துக்கொண்டிருப்பதை பற்றி சிந்தியுங்கள். கடந்த 5 வருடங்களாக வாட்மேன்கள் என்ற சவுகிதார்கள் நமக்குப் பொழுதுபோக்க உதவினார்கள். இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும்  அவர்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.