புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (14:49 IST)

யானை பாகனாக விஷ்ணு விஷால் "காடன்" படத்தின் விறு விறுப்பான மேக்கிங் வீடியோ ..!

தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
 
சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்த நிலையில் சற்றுமுன் காணப்படாத கிளாமர் உலகம் எனும் பெயரில் இப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் யானைப்பாகன் மாறனாக நடிக்கும்  நடிகர் விஷ்ணு விஷாலின்  கேரக்டர் உருவான விதம் குறித்து தத்ரூபமாக எடுத்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவிருப்பாத்து குறிப்பிடத்தக்கது.