வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (16:30 IST)

துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து சர்காரிலும் அதே காட்சியா...?

துப்பாக்கி, கத்தி படத்துக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62 வது படமான இதில், அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா எனப் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது, விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான சர்கார் ப்ரோமோஷன் வீடியோவில் தளபதி விஜய் தனக்கே உரித்தான ஸ்டைலிலில் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.  

 
 
துப்பாக்கி, கத்தி படத்தில் இடப்பெற்ற அதே விதமான சண்டை ஸ்டைல் தற்போது சர்க்கார் படத்திலும் இடப்பெற்றுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் இது தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.