அனிருத்-சிவகார்த்திகேயன் இடையே உள்ள ரகசியம்!
சிவகார்த்திகேயன் , சமந்தா நடிப்பில் சீமராஜா திரைப்படம் படம் விநாயகர் சதுர்த்தியன்று (செப்.13)வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் படத்துக்கு பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி செல்வார்கள்.அந்த வகையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இதற்காக சிவகார்த்திகேயன் பல்வேறு விளம்பரநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகின்றார்.
அப்போது ஒரு நிகழ்ச்சியில் நான் திரையுலகுக்கு வந்த போது , அனிருத்திடம் நீங்க சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன்.
அவரும் நீங்கள் ரகுமான் சார் இசையில் நடிக்க வேண்டும் என்று கூறினார், தற்போது நாங்கள் இருவர் சொன்னதும் நடந்துவிட்டது' என்றார்.