உலக விருதுகளை வென்ற ஒரே தமிழ்படம் : குவியும் வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் 'டூலெட் ’என்ற படம் இயக்கியுள்ளார். இது உலக அரங்கில் பல விருதுகளை வென்றுள்ளது. தழிழனின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியுள்ளது.
இப்போது வரைக்கும் சிய விருது உள்ளிட்ட 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது டூலெட் படம் . மேலும் பல விருதுகளுக்காக இது 80 முறை முன்மொழியப்பட்டிருந்த நிலையில் டூலெட் படம் இவ்வளவு விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செழியன் கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்ஆவார். இந்நிலையில் தான் இயக்கிய டூலெட் என்ற முதல் படத்திலேயே மிக அதிகமான விருதுகளை பெற்ற இயக்குநர் என்ற உலகளாவிய பெருமை பெற்றுள்ளார்.
இதில் முக்கியமாக ஆஸ்கார் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநர் செழியனை புகழ்ந்து பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நகரத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதையும், இதில் நடுத்த மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இப்படத்தை செழியன் இயக்கியுள்ளார். இதில் சந்தோஷ்ஸ்ரீராம், ஷீலா ஆகியோர் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர்.