திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (14:54 IST)

அண்ணாச்சி நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தை வெளியிடும் முன்னணி நிறுவனம்?

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதற்காகவே பல கோடிகள் செலவு செய்து 10க்கும் மேற்பட்ட நடிகைகளை அழைத்துவந்து பிரம்மாண்டமாக நடத்தினர்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச் செழியன் தி லெஜண்ட் படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.