வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (09:54 IST)

படப்பிடிப்பில் நடந்த திகில் சம்பவம்: ஹரிஷ் கல்யாண் அதிர்ச்சி

ஹரிஷ் கல்யாண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் லடாக்கில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை தனியார் இணைய  ஊடகத்துக்கு பகிர்ந்தார். நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறும்போது,
 
"சொர்க்கம் மாறி தெரியிற சில இடங்களுக்கு செல்வது சில ஆபத்தானதாக இருக்கும்.  கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து இருக்கும். லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த மாதிரி ஒரு அனுபவம் எங்களுக்கு இருந்துச்சு.
 
ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்து முடித்தோம். திடீரென்று, ஒரு உதவி இயக்குனரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்று தெரியும்  வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி  ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடிவிடவில்லை, அது இறுதியில் அவரது நுரையீரலை பாதிச்சிருந்தது. என்றார்.