செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (22:44 IST)

Big Boss- லிருந்து வெளியேறிய நடிகர் முதல் வீடியோ...வைரல்

தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் பொழுதுபோக்கு அம்சம் பிக்பாஸ். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடிகர் கமல்ஹசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு எனத் தனி ரசிகர் பட்டாளே உண்டு.

இந்நிலையில், கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் டபுள் எலிக்சன் செய்யப்பட்டது. இதில் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷூம், ஞாயிறுக்கிழமை நிஷாவும்  எலிக்சன் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஜித்தன் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், பிக்பாஸ் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அங்கு 70 நாட்கள் இருந்திருக்கிறேன். அது உங்களது ஆதரவினால்தான். இதற்கான நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

பிக்பாஸ் வீட்டில் ஆதரவு கொடுத்ததுபோல் எனது அடுத்து வரவுள்ளப் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள் எனக் கூறியுள்ளார். இது வைரலாகி வருகிறது.