செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (21:55 IST)

''துணிவு'' பட முதல் சிங்கில் #ChillaChilla இணையதளத்தில் லீக் ! படக்குழு அதிர்ச்சி

Thunivu
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு பட முதல் சிங்கில் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தில் அஜித் மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வலிமை படத்திற்குப் பின், அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.  

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில், ஜிப்ரான் இசையில், அனிருத்  குரலில், உருவாகியுள்ள #ChillaChilla என்ற முதல் சிங்கில்  பாடலின் ஷூட்டிங் நடந்தது.

 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா பாடல் இன்று இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.
இது, படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.