திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (18:14 IST)

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பை நடிகை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இந்த தொடர் முடிவடைய இருப்பது உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை, பிற்பகல் 3:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு தொடர், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு ஆண்டுகளாக இந்த தொடர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. \

விவசாய பெண்ணின் கதை என்பதால், இந்த கதை விறுவிறுப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இதில் இறுதி நாளில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வைஷாலி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை தொடர்ந்து, இந்த தொடர் முடிவடைய இருப்பதால், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதை அடுத்து, சில சீரியல்கள் முடிவடைய இருக்கும் நிலையில், அவற்றில் ஒன்று முத்தழகு என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva