வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (19:05 IST)

கலெக்டரை சந்தித்த பிரபல இயக்குனர்

seenuramasamy- shajevana IAS
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி  தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்,  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ஒன்பதாவது  படம் "கோழிப்பண்ணை செல்லதுரை".

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து, ஏகன்  கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள  இத்திரைப்படமான  படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்து தான் எழுதிய 'புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை'என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கி பல சீர்மிகு பணிகளால் தேனி மாவட்ட மக்களின் அன்பை பெற்ற பெண் கலெக்டரை வாழ்த்தினார்.இதுகுறித்த புகைப்படம் பரவலாகி வருகிறது.