திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (18:01 IST)

பிக் பாஸ் ஜோடியோடு அந்த மாதிரி ஒரு படம் பண்ணனும் - ஜூலியின் ஆசை!

ஆரவ்வுடன் சேர்ந்து ஒரு ரொமான்டிக் காதல் படத்தில் நடிக்கவேண்டும் என  பிக் பாஸ் ஜூலி தெரிவித்துள்ளார். 


 
கடந்த 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் வீர தமிழச்சி என்று பெரிய புகழை சம்பாதித்தவர் ஜூலி. அந்த அடையாளம் தான் அவரை ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றுக்கு கொண்டு போனது. 
 
ஆனால் அவர் ஜல்லிக்கட்டில் கிடைத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெடுத்துக்கொண்டதோடு  கேலி கிண்டலுக்கும்  ஆளானார். அவரின் கருத்துக்களும் எண்ணங்களும் எதிர்மறையாகவே மக்களால் பார்க்கப்பட்டது. ஆனால், அதை பற்றி கவலை படாமல் இருந்த ஜூலி டிவி நிகழ்ச்சிகள் தொடங்கி சினிமா வரை சென்று விட்டார். 
 
இந்த நிகழ்ச்சியில் ஆரவ்- ஓவியா இடையே காதல் மலர்ந்தது. அப்போது காதல் சம்பந்தமான விவாதம் எழும் போது ‘காதல் கல்யாணம் செய்ய மாட்டேன். வீட்டில் பார்க்கும் பையனைதான் மணம் புரிவேன்’ என்று ஜூலி கூறியிருந்தார். 
  
பின்னர் , விமல் நடிப்பில் வெளியான ‘மன்னர் வகைரா’ படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த ஜூலி அதன் பின்னர் உத்தமி, அம்மன் தாயி, அனிதா எம் பி அம்மன் எஸ் போன்ற பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் சமீபத்தில் ஜூலியின் நண்பர் மார்க்குடன் கூட ஒரு புதிய படத்தின் கமிட் ஆகியிருந்தார். 
 
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி தான் நடித்துவரும்  படங்கள் பற்றி கூறினார். அதாவது, அம்மன் தாயி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அனிதா எம் பி பி எஸ் படம் இப்போதைக்கு கொஞ்சம் பிரச்சனையில் இருக்கு அதனால அதைப்பற்றி பேச வேண்டாம் என்றார். 


 
மேலும், பிக் பாஸ் நடிகர்களில் யாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்ற கேள்விக்கு ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு எல்லாரையும் பிடிக்கும் ஹாரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ எனக்கு ரொம்ப பிடித்தது . ஆனால் அரவ்வுடன் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று சிரித்துகொண்டே கூறினார் ஜூலி.