புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (22:28 IST)

’தளபதி 64’ படத்தின் பூஜை தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க உள்ள 64வது திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

‘தளபதி 64’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை மிகப் பெரும் செய்தியாக இருந்த நிலையில், அதனை அடுத்து இந்த படத்தில் அந்தோணி வர்கீஸ், சாந்தனு மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாக வெளிவந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் மீண்டும் விஜய் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் இரண்டாவது வாரம் இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நாளை இந்த படத்தின் பூஜை நடை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து நாளை ’தளபதி 64’ பட பூஜையின் ஸ்டில்கள் வெளியாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் அதனை வரவேற்க காத்திருக்கின்றனர். தினந்தோறும் தளபதி 64 படத்தின் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது