திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:02 IST)

தளபதி 66 படத்தின் கதாநாயகி யார்? அறிவிப்பு எப்போது?

விஜய் 66 படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமைக்கான பேச்சுவார்த்தையை ஜி நிறுவனத்துடன் பேசி வருகிறாராம் தில் ராஜு. அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையா என்று சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த அளவுக்கு விற்பனையாக வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி யார் என்பதை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாம் படக்குழு. இந்த படம் காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கும் படம் என்பதால் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.