புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:13 IST)

ரஷ்யா படப்பிடிப்பு ரத்து… தளபதி 65 படக்குழு செல்லும் நாடு இதுதான்!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடக்க இருந்த நிலையில் இப்போது ஒரு ஐரோப்பிய நாட்டில் நடக்க உள்ளதாம்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.  கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, இசையமைப்பாளராக அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த இயக்குனர் நெல்சன் முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ரஷ்யாவுக்கு பதிலாக ஒரு ஐரோப்பிய நாட்டில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். அதற்குக் காரணம் அந்த நாட்டில் படப்பிடிப்பை நடத்தினால் ஒரு குறிப்பிட்ட தொகை மானியமாக படக்குழுவுக்குக் கொடுக்கப்படும் என்பதுதானாம்.

சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.