கணவரை பிரிகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகள்?
தெலுங்கு சினிமாவில்க்யின் மகள் ஸ்ரீஜா, தனது கணவரை விவாகத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, சிரிஸ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்தார். சில ஆண்டுகள் கழித்தது கணவர் பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகக் கூறி 2011 ஆம் ஆண்டு அவரை பிரிந்தார். இதையடுத்து நடிகர் கல்யாண் தேவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீஜா – கல்யாண்தேவ் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது சமூக வலைதளக் கணக்கில் தனது பெயருக்குப் பின் இருந்த கணவர் பெயரை நீக்கி குடும்பப் பெயரானகொனிடேலா என்பதை வைத்துள்ளார்.