செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (00:03 IST)

திருமணமான ஒரே வருடத்தில் தற்கொலை முயற்சி செய்த பிரபல நடிகை

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் 'மகாபலிபுரம்' என்ற படத்தில் நடித்தவருமான விதிகா சேரு, பிரபல தெலுங்கு நடிகர் வருண் சந்தீஷை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்



 
 
திருமணத்திற்கு பின்னர் வருண்-விதிகா தம்பதியினர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட நிலையில் சமீபத்தில் ஐதராபாத் திரும்பினர். இந்த நிலையில் திடீரென விதிகா சேரு தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.
 
சமீபத்தில் வருண், விதிகா ஆகிய இரு வீட்டார்களும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை போட்டதாகவும், இதனால் மனமுடைந்த விதிகா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது