விளம்பரமா? சமூக அக்கறையா? கலக்கும் தமிழ் படம் 2.0 போஸ்டர்
தமிழ் படம் 2.0 திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் இன்று வெளியான போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தமிழ் படம் 2.0. இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிமுக பாடல் படம் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை வைத்து அனைத்து ஹீரோக்களை கேலி செய்துள்ளார் இயக்குநர். படம் நாளை மறுநாள் நிலையில் இன்று படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பேனர், கட்அவுட் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால் தயவு செய்து தவிர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படம், சர்கார் பர்ஸ்ட் லூக் போஸ்டர் என எதையும் விட்டு வைக்கவில்லை.