வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:51 IST)

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம் மதுரையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர் மற்றும்  திரையுலகத்தை சேர்த்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்தை இன்றுவரை யாராலும் நிரப்ப முடியாது. அப்படிதான் நடிகர் வடிவேலுவும் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். அவர்  படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும் இன்று வரை அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. வைகை புயல் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் அவரை இன்றைய இளைஞர்கள் மீம்ஸ்க்களால் சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், இன்று காலை வடிவேலுவின் மகள்  கலைவாணிக்கு ராமலிங்கம் என்பவருடன் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.