1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2017 (19:16 IST)

சினேகன் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்

விஜய் டிவி நடத்தும் பாக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாடலாசிரியர் சினேகன் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


 

 
தமிழ் சினிமா பாடலாசிரியர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது “ அம்மா நீ எங்களுக்கு வேண்டும்’ என்ற பாடலை எழுதி வெளியிட்டார். அதன்மூலம் தமிழகத்தில் அவர் பிரபலமானார். இவர் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்றுள்ளார். இதன்மூலம் மீண்டும் பிரபலமாகி விட்டார்.
 
இவரது வீடு சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ளது. நேற்று மதியம் சில மர்ம நபர்கள் இவரது வீட்டு வாயில் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். உள்ளே நுழைய முடியாததால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
 
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர அந்த மர்ம நபர்கள் தப்பி சென்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்கனவே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.