செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (22:43 IST)

பிக்பாஸ்: யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த 15 பேர்களுக்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது பங்கேற்பாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று பார்ப்போம்



 
 
பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு வாரச்சம்பளம் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், போட்டியில் இருந்து வெளியேறியவர்களுக்கு சம்பளம் கட் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதன்படி வாரச்சம்பளம் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
வாரம் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்:
நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி
 
வாரம் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்:
சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், 
 
வாரம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள்:
ரணி, ஜூலியானா, ஆரார், ரைசா
 
இந்த தகவல்கள் இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.