வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (15:32 IST)

தீவிர யோகா பயிற்சியில் இறங்கிய நடிகை தமன்னா !

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா. பாகுபலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாக வளர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் சினிமாக்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைகளை தாங்களே செய்வது தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வ்ருகிறார். வீடு கூடுதல், தோட்ட வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், உடற்ப்பயிற்சி செய்தல் உள்ளிட்ட வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கடந்த சில நாட்களாகவே சமையல் செய்வது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.

அந்தவகையில் தற்ப்போது வீட்டில் யோகா செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு "அன்பை ஏராளமாகக் கொடுக்கவும், பெறவும் இதய சக்கரம் திறக்கிறது" என அழகான கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த யோகா போஸ் அனைவரையும் ஈர்த்து வருகிறது.