திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (15:29 IST)

பாரதிராஜாவுக்கு போட்டியாக டி.ஆர் !!!

டி ராஜேந்தர் மற்றொரு தயாரிப்பாளர் சங்கத்தை துவங்கவுள்ளார் என்ற செய்தி கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி ராஜேந்தர் அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து இப்போது புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளனர். 
 
ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் டிராஜேந்தர் மற்றொரு சங்கத்தை இதற்கு போட்டியாக துவங்கவுள்ளார். 
 
இதற்கு தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்றும் அவர் பெயரிட உள்ளார். டிசம்பர் 5-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
டி ராஜேந்தர் அணியில் போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஸ் கே ராஜன் உள்ளிட்டோர் புதிய சங்கத்தில் பொறுப்பேற்கிறார்கள். சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியுற்ற ஜே.எஸ்.கே சதீஷும் இவர்களுடன் இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.