வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:53 IST)

ஏன் பிறந்தாய் மகனே.. ஏன் பிறந்தாய்? – சிம்புவுக்காக கதறிய டி.ராஜேந்தர்!

பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் டி.ராஜேந்தர் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கலை முன்னிட்டு ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேட்டியளித்து திரைப்பட விநியோகஸ்தரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் “என் மகனின் ஈஸ்வரன் படம் வெளியாக வேண்டும். இது முன்னமே திட்டமிட்டது. ஆனால் மாஸ்டர் படத்திற்காக பலர் ஈஸ்வரனுக்கு எதிராக சதி செய்கிறார்கள். AAA பட நஷ்டத்திற்காக மனநஷ்ட ஈடு கேட்டு கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.