வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

லீனாவிற்கு ஆதரவு!!! சித்தார்த்தை மிரட்டினாரா சுசி கணேசன்?

லீனாவிற்கு ஆதரவு தெரிவித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் மிரட்டியதாக சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
 
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த சுசி கணேசன், தன் மீது அபாண்டமாக பழிபோட்ட லீனா மீது வழக்கு தொடருவேன் என ஆவேசமாக பேசினார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த லீலா, இவனை மாதிரி பொய்யர்களோடல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும் தான் எனக்கும் பிடிக்கும் என பதிலளித்தார்.
 
லீனாவின் ட்வீட்டை பார்த்த சித்தார்த், லீனா விஷயத்தில் அவரை ஆதரிக்கக்கூடாது என சுசி கணேசன் தரப்பிலிருந்து அழுத்தம் வருகிறது. அவர் என் வயதான தந்தைக்கு போன் போட்டு மிரட்டியிருக்கிறார். இதற்கெல்லாம் பயப்படப்போவதில்லை என்றும், லீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் என்றும் சித்தார்த் கூறியிருக்கிறார்.