திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (19:52 IST)

சூர்யாவின் ''வாடிவாசல்'' பட புதிய அப்டேட்...

சூர்யா – வெற்றிமாறன் இணைந்து பணியாற்றி வரும் படம்  வாடிவாசல் . இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் புத்தாண்டில் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம்  நல்ல வரவேற்பை பெற்றதுடன், கடும் விமர்சனங்களையும் சந்தித்தது.

இதையடுத்து  நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் துபாய் டூட் சென்றார். இ ந் நிலையில் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பும்போது, கேரளாவுக்கு  சென்றுள்ளார். இ ந் நிலையில்,   சூர்யா, ஜோதிகா இருவரும் அங்கு நடைப்பயிற்சி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

வாடி வாசல் படத்திற்காக நடிகர் சூர்யா கேரளாவில் களரி நிபுணர்களிடன் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இத்னால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.