1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (19:32 IST)

“தமிழிசையை தரக்குறைவாகப் பேச வேண்டாம்” – சூர்யா ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் வேண்டுகோள்

‘நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவை விமர்சித்த தமிழிசையை தரக்குறைவாகப் பேசவேண்டாம்’ என சூர்யா நற்பணி மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

 
நீட் தேர்வு குறித்து தன்னுடைய கருத்தை, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பதிவு செய்திருந்தார் நடிகர் சூர்யா. அதை, பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துப் பேசினார். உடனே பொங்கியெழுந்த சூர்யா ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தமிழிசையைக் கலாய்த்து பதிவுகளைப் போட்டனர். அதில் சில பதிவுகள் தரக்குறைவாக இருந்தன.
 
இந்நிலையில், சூர்யா நற்பணி மன்றத்தில் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ‘மருத்துவர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதை அண்ணன் சூர்யா ஒருபோதும் ஏற்க மாட்டார். விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்வதும், ஆரோக்கியமான செயல்பாடுகளால் எதிர்வினை ஆற்றுவதுமே சூர்யா அண்ணன் கற்றுத்தந்த நற்பண்பு. எனவே, தரக்குறைவாக விமர்சிக்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினர்கள் அல்லாமல் சமூக வலைதளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.