புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (20:05 IST)

நடிகர் சூர்யா இல்லாமல் நடந்த அவரது புதிய பட பூஜை !!.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியாகிப் பெரும் வெற்றிப் பெற்ற படம் சூரரைப் போற்று.

இப்படம் சமீபத்தில் அமெரிக்காவில் ஆஸ்கர் விழாவில் திரையிடப்பட்டது. அத்துடன் வசூலில்  பெரும் சாதனை நிகழ்த்தியது.


இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதுவும் அடுத்து பாண்டிராஜன் இயக்கவுள்ள ஒரு கிராமம் சார்ந்த படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா இயக்கவுள்ள  படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. 

சூர்யா இன்று பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இப்படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

மேலும்,கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணம்பெற்றுள்ள சூர்யா தற்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.