திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (17:10 IST)

அடுத்த படத்தையும் ஓடிடிக்கு அனுப்பும் சூர்யா!

சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலிஸ் ஆக உள்ளதாம்.

நடிகர் சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜெய்பீம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை என்பவர் தா.செ.ஞானவேல் இயக்கி வருவதாகவும் சீன் ரோல்டன் இசையமைத்து வருவதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்த சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்திலேயே நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.