சமூகவலைதளத்தில் இணைந்த சூர்யா பட ஹீரோயின்
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு விருமன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், நடிகையாக அறிமுகமாகவுள்ள அதிதி சமூக வலைதளங்களில் இணைந்துள்ளார். அவரது டுவிட்டர் ஐடி https://twitter.com/AditiShankarofl ஆகும். அதேபோல் அவரது இன்ஸ்டாகிராம் ஐடி https://www.instagram.com/aditishankarofficial/ ஆகும் அவர் டுவிட்டரில் கணக்குத் தொடங்கிய 18 மணிநேரத்தில் 11 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். மேலும், இப்படத்தில் சிறப்பாக நடித்து உங்களைப் பெருமைப்படுத்துவேன் எனக் கூறி நடிகர் சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.