வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (08:36 IST)

மீரா மிதுன் உருவ பொம்மை எரித்து சூர்யா ரசிகர்கள் நூதன போராட்டம்!

அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவுசெய்தனர். இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே அவரால் பாதிக்கப்பட்ட சிலர் குற்றவாளியை ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதித்தீர்கள் என எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேரன் மீது அபாண்ட பழி சுமத்தி மீரா மிதுன் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசி தனக்கு தானே பப்ளிசிட்டி கிரியேட் செய்து வருகிறார்.

அந்தவகையில் விஜய் , சூர்யா குறித்து அவதூறு பேசி பலரது மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மீரா மிதுன் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மீரா மிதுனின் இந்த செயலை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் சூர்யா ரசிகர் சார்பில் புகார் மனு கொடுத்தனர்.இந்த புகாரை மீரா மிதுன் “நடிகர் வடிவேல் காமெடி” என்று நக்கலடித்து ட்வீட் செய்தார். இதையடுத்து கேலி பதிவு செய்த மீரா மிதுனின் உருவ பொம்மைகளை எரித்து, புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.