திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (12:14 IST)

அரவிந்தசாமி பிறந்த நாளில் நன்றி கூறிய நடிகர் சூர்யா..! வைரல் போஸ்டர்..!

நடிகர் அரவிந்த்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நடிகர் சூர்யா அவர் நடித்த திரைப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழ் திரை உலகின் சாக்லேட் பாய் என்ற செல்ல பெயரை பெற்றவர் அரவிந்த்சாமி என்பதும் அவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று அரவிந்த்சாமி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ என்ற திரைப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து வருகிறார். 
 
இந்த நிலையில் ’மெய்யழகன்’ திரைப்படத்தில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த அரவிந்த்சாமிக்கு தனது நன்றி என்றும் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி ’மெய்யழகன்’ படத்தின் புதிய போஸ்டரை சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Mahendran