வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:41 IST)

சூர்யா 42: 6 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த சிறுத்தை சிவா திட்டம்!

surya 42
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 6 நாடுகளில் நடித்த சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளிலும் அதன் பின்னர் கிழக்கு நாடுகளான கம்போடியா வியட்நாம் தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது
 
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
 
Edited by Siva