ப்ரைம் வீடியோவில் வெளியானது சூர்யாவின் அடுத்த படம்!
சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் குடும்பத்தினர் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்திருக்கும் படமான ஓ மை டாக் வரும் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ளது. குழந்தைகளை கவரும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.