வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (09:29 IST)

20 ஆண்டுகளாக திரையில் சிகரெட் பிடித்ததில்லை… ஆனால் ரோலக்ஸுக்காக அதை மீறினேன் – சூர்யா

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. அதில் பல சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்படி ஒரு நேர்காணலில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி பேசியுள்ளார்.

அதில் “ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்காக நான் அரை நாள் மட்டுமே நடித்தேன். படப்பிடிப்புக்கு செல்லும் வரை வசனம் என்ன என்பதெல்லாம் தெரியாது. ரோலக்ஸ் பாத்திரம் ஒரு கெட்டவன் என்று தெரியும். நான் திரையில் 20 ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கவில்லை. அதை ஒரு கொள்கையாக வைத்திருந்தேன். ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஏன் வில்லனைக் கொண்டுவரவேண்டும் என்று ஷூட்டுக்கு முன்னர் சிகரெட்டை வாங்கி பற்றவைத்தேன். கமல் சார் ஷூட்டுக்கு வருவார் என்று சொன்னார்கள். அவர் வருவதற்குள் நடித்து முடித்துவிட்டேன். ஏனென்றால் அவர் முன்னால் என்னால் நடிக்கமுடியாது” எனக் கூறியுள்ளார்.