வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (09:45 IST)

’மாநாடு’ படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி: சுரேஷ் காமாட்சி டுவிட்

maanadu
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் மாநாடு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் மாநாடு திரைப்படத்தின் மொத்த வசூல் 117 கோடி என்று தெரிவித்துள்ளார் 
 
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது
 
மேலும் இந்த படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்றும் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்