1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (16:59 IST)

தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும்.. பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து..!

தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும். 
 
அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். 
 
மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள். எப்போதும் நல்ல படங்களுக்கு தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்வார். நாயகன் விக்ரம். தங்கலான் ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும். வாழ்த்துகள். 
 
எப்போதுமே தன் பங்களிப்பு மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமைய மெனக்கிடுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது மற்றுமொரு தளத்திற்கு அவரை அழைத்துச் சொல்லும்.  பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கு வசூலை உலக ரீதியாக பெருக்கித் தரும் படமாக அமையும். 
 
நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.
 
Edited by Mahendran