வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (15:46 IST)

“சூரகன்”திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  


டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்..

 தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசியதாவது...
சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம்.

இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார்.

தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி.

 கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசியதாவது...
இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

 ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி பேசியதாவது...
வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

 நடிகை சுபிக்‌ஷா LA பேசியதாவது...
இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஹீரோ கார்த்திகேயன் மிகப்பெரிய ஆதரவு தந்தார். மிகக்கடினமான உழைத்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தியேட்டரில் போய்ப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

 நடிகை தியா பேசியதாவது...
இந்த படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் மிக முக்கியமான ரோல் தந்துள்ளனர். என்னுடைய ரோல் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும். வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஷுட்டிங்கில் அனைவரும் எனக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.  

 நடிகர் வின்சென்ட் அசோகன் பேசியதாவது...
சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி.

 இயக்குநர் சதீஷ் கீதா குமார்  பேசியதாவது...
இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம்.

ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார்.

சுபிக்‌ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

 தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது...
கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.  

 நடிகர்கள் :
V.கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர்.
 இயக்கம் : சதீஷ் கீதா குமார்
 திரைக்கதை :- V.கார்த்திகேயன்
பாடல் வரிகள்- கு.கார்த்திக், திரவ்
நிர்வாகத் தயாரிப்பாளர்  பி.கார்த்திக்
 ஒளிப்பதிவு  சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்
 எடிட்டர் ராம் சுதர்ஷன்
கலை இயக்குநர்: தினேஷ் மோகன்
 இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி
 மக்கள் தொடர்பு  சதீஷ் ( AIM )

Edited By: Sugapriya Prakash