விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து, தன்னை தாக்கியதுடன் அவதூறு பேசியதாக நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்தி சைதாபேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், தன்னை தாக்கி, அவதூறாக பேசிய விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் இருவரும் நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தது.
இதையடுத்து விஜய்சேதுபதி மற்றும் ஜான்சனின் மேல் மறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், இதை ஏற்ற நீதிமன்றம் தாக்குதல் புகாரை ரத்து செய்ததது. ஆனால், அவதூறு புகாரை மூன்று மாதத்திற்குள் முடிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஜய்சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடிகர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் மத்தியஸ்த மையத்தின் மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விஜய் சேதுபதி தரப்பு வாதிட்ட நிலையில்., 'அவதூறு வழக்கை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளரும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த வழக்கில் எதுவும் செய்ய முடியாது' என கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இது விஜய் சேதுபதி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.