செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (22:58 IST)

சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட ஷூட்டிங் அரங்கம் கலைப்பு

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் சல்மான்கான். இவரது ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றி பெரும்.  ஆனால், சமீபத்தில் அவரது நடிப்பிலும், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான  ராதே படத்தை அவரது அப்பா சலீன்கான் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில்,சல்மான் கானின் அடுத்த படம் ஏக் தா டைகர் -3 வது பாகத்தின் படப்படிப்பு அரங்குகள் கலைக்கப்பட்டுள்ளன.

சல்மான் கான் – கேத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் ஏக் த டைகர் படம் கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்தது.  ஆனால் கேத்ரினா கைப்புக்குய் கொரோனா தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு தாமதமானது.

இந்நிலையில் கோர்காவுன் என்ற பகுதியில் இப்படத்திற்காகப் போடப்பட்ட பிரமாண்ட அரங்குகள்  சில நாட்களுக்கு முன் வீசிய யாஷ் புயலால் சேதமடைந்தது. இதனால் இப்படப்பிடிப்பு அரங்கை  கலைக்க தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உத்தரவிட்டுள்ளார்.  இனி எப்போது மீண்டும் அரங்கு போடப்படும் என விரைவில் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.