1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (15:08 IST)

சூப்பர் ஸ்டாரின் ஃபவர்புல்லான ''காட்பாதர்'' பட டிரைலர் ரெடி!

godfather
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் காட்பாதர் டிரைலர் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் லூசிபர் படம் தெலுங்கில் ‘’காட்பாதர்’என்ற பெயரில் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததுள்ள  நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்  சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜூலை 4 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி  வரவேற்பை பெற்ற நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு    காட்பாதர் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த  நிலையில்,  காட்பாதர் படத்தின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை வெளியான சூப்பர் ஸ்டார் படங்களில் இப்படம் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், இப்படம் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது, இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், இது காட்பாதர் படத்தின் வெற்றிக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.   ஆனால். படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சமீபத்திய படங்கள் எதுவும் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், இப்படம் நிச்சயம் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 15 ல் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில், இப்படத்தின் பவர்ஃபுல்லான டிரைலர் தயாராகியுள்ளதாகவும், இது சூப்பர் சிரஞ்சீவியின் படங்களில் இல்லாத அளவு சூப்பராக உருவாகியுள்ளதாகவும்  பிரபல ஊடகவியலாளர் தன்  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  விரைவில் பாட்பாதர் படக்குழுவினர் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.