வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (11:40 IST)

சூர்யாவின் 'காப்பான்' படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட்

நடிகர் சூர்யா நடித்துவரும் 'காப்பான்' படத்தின் முக்கியமான ரயில் காட்சி ஒடிசாவில் படமாக்கப்பட்டுள்ளது.
 

 
நடிகர் சூர்யா 'என்ஜிகே' படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் காப்பான். கேவி ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் காப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சியான ரயில் படக்காட்சியை ஒடிசாவில் படக்குழு எடுத்து முடித்து உள்ளது. சூர்யா ஒடிசாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பியுள்ளார். படத்திற்கு மிக முக்கியமான ஒடிசா ரயில் படக்காட்சி படமாக்கபட்டதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தூங்குவதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. 
 
இதற்கிடையே சூர்யா என்ஜிகே படத்தின் டப்பிங் பணிகளிலும் பிசியாகியுள்ளார். எனவே வரும் மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது.