1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:51 IST)

இதை செஞ்சாலே போதுமே! புயலால் பாதித்த விவசாயிகளை காக்க ஜிவி கொடுத்த சூப்பர் ஐடியா

கஜா புயலால் டெல்டா மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வீடு, உடை, நிலம், விவசாயம் என அவர்களது வாழ்வாதாரமே பாதிப்புக்கு உள்ளாகியது. 
 
விவசாயிகளின் பலரது வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரம் புயலில் வேரோடு முறிந்து விழுந்தது. அதனை நம்பி இருந்த விவசாயிகளின் நிலமை கேள்வி குறியாகவே இருக்கிறது. 
 
இந்நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
 
,கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பார்வையிட வந்துள்ளோம். பல லட்சகணக்கான மரங்கள் விழுந்துகிடக்கின்றன. மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் என கூறுகின்றனர்.சமூக ஆர்வலரகள் எல்லாரும் வேலை செய்து வருகின்றனர். நிலைமை மீண்டும் பழையபடிக்கு கொண்டு வர பல மாதங்கள் ஆகும். 
 
லட்சகணக்கான தென்னை மரங்களும், தேங்காய்களும் விழுந்து கிடக்கின்றன. இது தான் சரியான நேரம் என பார்த்து பேரம் பேசி வாங்காமல், மார்கெட் விலையில் வாங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். மார்கெட் விலையில் கொள்முதல் செய்ய கீழ்கண்ட எண்களில் 
 
நிர்மல்: 6374484149, குணா: 8800391662 தொடர்பு கொள்ளலாம். அரசு இந்த பகுதிகளில் மண் பரிசோதனை செய்து, குறுகிய காலப் பயிர்கள் விளைவிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.