1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (11:52 IST)

முடிவெடுக்கும் உரிமை பெண்கள் கையில்தான் உள்ளது… ஹேமா கமிட்டி குறித்து சன்னி லியோ கருத்து!

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் தமிழில் ஒப்பந்தமான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட்டில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அவர் பேசியுள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அதில் “பாலியல் அத்துமீறல்கள் குறித்து என்னுடைய அனுபவங்களைப் பற்றி மட்டுமே பேசமுடியும். அதுபோன்ற தொல்லைகளை நான் எதிர்கொண்டதில்லை. முடிவெடுக்கும் உரிமை பெண்கள் கையில்தான் உள்ளது.

முடியாது என்று சொல்லவேண்டிய இடத்தில் முடியாது என்றுதான் சொல்லவேண்டும். தவறான இடங்களில் நாம் இருக்கக் கூடாது. இப்படி முடிவெடுத்ததால் எனக்குப் பல கதவுகள் மூடப்பட்டன. ஆனால் அதை நான் பிரச்சனையாக நினைக்கவில்லை. ஒரு வாய்ப்புப் போனால் வேறு வழியில் வாய்ப்புகள் வரும்” எனக் கூறியுள்ளார்.