மூன்றாவது நாளாக கல்லூரி மெரிட் லிஸ்டில் இடம் பெற்ற சன்னி லியோன் !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல கல்லூரி இணையதளம் ஒன்றில் பிஏ ( ஹானர்ஸ்) படிப்பில் சேர்வோருக்கான முதல் தகுதி பட்டியலை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
அதில், முதல் பெயரே பாலிவுட் நடிகை சன்னியோனின் பெயர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் பெயரின் விண்ணப்ப ஐடி 9513008704 எண் 207777-6666 ஆகியவற்றுடன் இந்த ஆண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அவர் பனிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சன்னிலியோன் தனுது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி தரப்பில் விசாரணை நடத்தவுள்ளனர்.தற்போது சன்னிலியோனின் பெயரை ஏபிசி என்று மாற்றினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ள மெரிட் லிஸ்டில் சன்னிலியோன் பெயர் இடம்பிடித்துள்ளது.
இன்றுடன் மூன்றாவது நாளாக அவரது பெயர் இப்பட்டியலில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.