வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (11:01 IST)

மீண்டும் இளம் ஹீரோக்களை ஒருங்கிணைத்த சுந்தர் சி! இந்தி படத்தின் காப்பியா?

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்க உள்ளாராம். இந்த படம் இந்தியில் வெளியான கபூர் & சன்ஸ் என்ற படத்தின் தழுவலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.