செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (14:17 IST)

சுந்தர் சி. படத்தில் விஜய், மகேஷ்பாபு...?

சுந்தர் சி. படத்தில் விஜய், மகேஷ்பாபு...?

இதுவரை சுந்தர் சி. இயக்கும் படம் குறித்த செய்திகளை கேள்விக்குறி இல்லாமல் எழுத முடிந்தது. யார் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார்கள் என்பதில் எந்த குழப்பமும் இருந்ததில்லை.


 


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்தை மிகப்பிரமாண்டமாக இயக்குகிறார் என்று செய்தி வந்தது முதல், கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பஞ்சமில்லாமல் போனது.
 
100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில், சரித்திர படமாக தயாராகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. அதில் தமிழ் பதிப்பில் விஜய்யும், தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபுவும் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று உலவுகிறது. 
 
படத்திற்கு இசை ரஹ்மான், கலை சாபு சிரில், கிராபிக்ஸ் மேற்பார்வை கமலகண்ணன் என்று தொழில்நுட்ப ஏரியாவில் ஓரளவு பெயர்கள் நிலைபெற்றுவிட்டன.
 
புலி என்ற தரித்திர சாரி, சரித்திரப் படத்தில் நடித்த விஜய், சுந்தர் சி.யின் சரித்திர படத்தில் நடிப்பார்னு நினைக்கிறீங்க...?